மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப்பள்ளிவாசலில் நிர்மாணிக்கப்பட்ட ஒன்று கூடல் மண்டபம் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹீர் மௌலானாவினால் திறந்து வைப்பு
மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப்பள்ளிவாசலில் கம்பரளிய திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட ஒன்று கூடல் மண்டபம்; (03.08.2019) சனிக்கிழமை மாலை முன்னாள் இராஜாங்;க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அலிசாஹீர் மௌலானாவினால் திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப்பள்ளிவாசலின் தலைவர் எம்.எச்.எம்.ஸியாம் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் யு.எல்;.எம்.என்.முபீன் பள்ளிவாயலின் நிருவாகிகளான சட்டத்தரணி ஏ.உவைஸ், கே.எல்;.எம்.கலீல், எம்.சுஹைர் (கணக்காளர் RDA) எம்.எச்.எம்.இக்பால் உட்பட நிருவாகிகள் முக்கியஸ்தர்கள் உலமாக்கள் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப்பள்ளிவாசலில் கம்பரளிய திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட ஒன்று கூடல் மண்டபத்தை முன்னாள் இராஜாங்;க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அலிசாஹீர் மௌலானா திறந்து வைத்தார்.
இதற்காக ஐந்து இலட்சம் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
கம்பரளிய திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல மத ஸ்த்தளங்களுக்கும் நிதியொதுக்கீடு செய்யப்பட்டது. இன்னும் இரண்டாம் கட்டத்திலும் மத ஸ்தளங்களுக்கு நிதியொதுக்கீடு செய்யப்படுமென முன்னாள் இராஜாங்;க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அலிசாஹீர் மௌலானா தெரிவித்தார்.