மட்டக்களப்பு ஸலாமா பவுண்டேஷனின் (Salama Foundation) ஏற்பாட்டில் காத்தான்குடி பீச் வேய் ஹோட்டலில் கிழக்கு மாகாணத்தின் ஏறாவூரில் அமைந்துள்ள கிழக்கு புற்று நோயாளர் பராமரிப்பு நிலையத்திற்கு நிதி திரட்டும் நிகழ்வு மட்டக்களப்பு ஜாமிஉஸ் ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாயலின் வழிகாட்டலில் 11.3.2020 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் EASCCA HOSPICE (Eastern cancer care hospice) தலைவர் Dr A Iqbal (MBBS,MD) Consultant clinical oncologist அவர்களின் சிறப்புரையும் ரைஸ் லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர்
அஷ்ஷெய்க் AM அக்ரம் நளீமி அவர்களின் விஷேட உரையும் இடம்பெற்றது.
Salama Foundation தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் வரவேற்புரையை Salama Foundation தலைவர் AL ஹரிஸ் ஏ ஹலீம் அவர்களும் இறுதியாக
சட்டத்தரணி A உவைஸ் (ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆ பள்ளிவாயல் உறுப்பினர்) அவர்களின்
நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தது.
மேற்படி நிகழ்வில் EASCCA HOSPICE (Eastern cancer care hospice) நிறுவனத்திற்கு காத்தான்குடி தனவந்தர் ஒருவரினால் வாகனம் ஒன்றும் மட்டக்களப்பு – காத்தான்குடி வர்த்தகர்களினால் இணைந்து சுமார் பதினைந்து இலட்சம் ரூபாய்கள் பண நிதியும் திரட்டப்பட்டன என்பதும் விஷேடமாக குறிப்பிடத்தக்கது.
மேற்படி நிகழ்வில் மட்டக்களப்பு ஜாமிஉஸ் ஸலாம் ஜும் ஆப் பள்ளிவாயலின் தலைவர் அல்ஹாஜ் எம் எச் எம் ஷியாம் பள்ளிவாயலின் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ எல் எம் அமீன் நளீமி உப தலைவர் எ எஸ் எம் வாயிஸ் மற்றும் பள்ளிவாயல் நிருவாக சபை உறுப்பினர்கள், காத்தான்குடி தள வைத்தியசாலையின் முகாமைத்துவ அதிகாரி எம் எஸ் எம் ஜாபிர், காத்தான்குடி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் நஸ்ருத்தீன், காத்தான்குடி பள்ளிவாயல்கள் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் செயலாளர், ஊடகவியலாளர்கள், உலமாக்கள், சமூக நிருவனங்களின் தலைமைகள், தனவர்ந்தர்கள், வர்த்தக சமூகத்தினர் மற்றும் நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
(இந்த நிகழ்வின் புகைப்பட தொகுப்பு)