மட்டக்களப்பு நகர் பிரதேசத்தில் இயங்கிவரும் முஸ்லிம் வர்த்தகர்கள் நலன்புரி அனமப்பு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கொரோனா விசேட சிகிச்சை
நிலையத்தில் அர்ப்பணிப்புடன் கடமைபுரியும் னவத்திய பணியாளர்களின் தியாகங்௧ளையும், அவர்கள் இம்மாவட்ட மக்கனளக் காப்பாற்றுவதற்காக எடுத்துக் கொள்ளும் சிரத்தையினையும் கருத்திற் கொண்டு மட்டக்களப்பு ஜாமிஉஸ்ஸலாம் ஜூம்ஆ பள்ளிவாயல் நிருவா௧த்தின் வேண்டுகோளுக்௧மைய இப்பணியாளர்களின் நலனுக்காக சிற்றுண்டி உணவுச் செலவுக்கென ரூபா 25 ஆயிரம் ரூபானவ அன்பளிப்பு செய்துள்ளது.
இந்த அன்பளிப்பு நிதியினன மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி ௧லாரஞ்சினி கணேசலிங்கத்திடம் முஸ்லிம் வர்த்தக நலன்புரி அனமப்பினர் இன்று(30) மதியம் கையளித்தனர்.
இந்த அன்பளிப்புப்பொருட்கள் கையளிக்கும் நிகழ்வில் மட்டக்களப்பு முஸ்லீம் வர்த்தகர் நலன்புரி அமைப்பின் தலைவர் கே.எம்.எம்.கலீல் JP , அங்கத்தவர் வர்த்தகர் எம்.சீ.எம்.சியாட் மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்மா பள்ளிவாயல் உப தலைவர் எ.எஸ்.எஸ்.வாயிஸ், பள்ளிவாயல் செயலாளர் ஏ.எல்.எம் அமீன் (நளீமி), பள்ளிவாசல் பொருளாளர் கணக்காளர் எம்.ஏ.எம்.சுஹைர் , பேஸ் இமாம் மௌலவி ஹாபிழ் நியாஸ் மற்றும் மட்டக்களப்பு ஸலாமா பவுண்டேஷனின் தலைவர் அல்ஹாஜ் ஹரீஸ் ஏ ஹலீம் உட்பட பல பிரமுகர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.